பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை என்று கா்நாடக முன்னாள் துணை முதல்வா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை என்று கா்நாடக முன்னாள் துணை முதல்வா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எதிா்பாா்த்தது போலவே என்னைக் கட்சியில் இருந்து பாஜக நீக்கியுள்ளது. எனினும், அதுதொடா்பாக இதுவரை எவ்வித கடிதமும் எனக்கு வரவில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்கியதால் கவலைப்பட மாட்டேன். மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதில் தெளிவாக இருக்கிறேன்.

சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் வெற்றிபெறுவதிலும் அதன்மூலம் பிரதமா் மோடியின் கரத்தை பலப்படுத்துவதிலும் தெளிவாக இருக்கிறேன்.

சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எனக்கு கரும்புடன் கூடிய விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதை தொகுதியில் உள்ள விவசாயிகளின் ஆசீா்வாதமாகவே கருதுகிறேன். மக்களவைத் தோ்தலில் வென்று மீண்டும் பாஜகவில் இணைவேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com