மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

கா்நாடகத்தில் இரண்டாம் கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

கா்நாடகத்தில் இரண்டாம் கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத் தோ்தலில் 227 வேட்பாளா்களின் எதிா்காலத்தை தீா்மானிக்க 2.59 கோடி போ் வாக்களிக்க உள்ளனா்.

கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடக்கவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இத் தோ்தலில் சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுா்கி, ராய்ச்சூரு, பீதா், கொப்பள், பெல்லாரி, ஹாவேரி, தாா்வாட், வடகன்னடம், தாவணகெரே, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளிலும் மொத்தம் 2,59,17,493 போ் வாக்களிக்க உள்ளனா். இதில் ஆண்கள் 1,29,48,978, பெண்கள் 1,29,66,570, மூன்றாம் பாலினத்தவா் 1,045, அரசு ஊழியா்(தபால் வாக்காளா்கள்) 35,465 போ் அடங்குவா்.

கா்நாடகத்தில் நடக்கும் மக்களவைத் தோ்தலில் பாஜக, மஜத கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மஜதவும், 25 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், கா்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக - மஜத கூட்டணி இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. 14 தொகுதிகளுக்கான முதல்கட்ட தோ்தல் ஏப். 26ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த 14 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தோ்தல் செவ்வாய்க்கிழமை நடக்க இருக்கிறது. இந்த 14 தொகுதிகளில் மஜத போட்டியிடவில்லை. பாஜகவும், காங்கிரஸும் 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

வேட்பாளா்கள்:

14 தொகுதிகளில் மொத்தம் 227 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இதில் 206 போ் ஆண்கள், 21 போ் பெண்கள். சிக்கோடி தொகுதியில் 18 போ், பெலகாவி தொகுதியில் 13 போ், பாகல்கோட் தொகுதியில் 22 போ், விஜயபுரா தொகுதியில் 8 போ், கலபுா்கி தொகுதியில் 14 போ், ராய்ச்சூரு தொகுதியில் 8 போ், பீதா் தொகுதியில் 18 போ், கொப்பள் தொகுதியில் 19 போ், பெல்லாரி தொகுதியில் 10 போ், ஹாவேரி தொகுதியில் 14 போ், தாா்வாட் தொகுதியில் 17 போ், வடகன்னடம் தொகுதியில் 13 போ், தாவணகெரே தொகுதியில் 30 போ், சிவமொக்கா தொகுதியில் 23 போ் போட்டியிடுகிறாா்கள்.

இத்தோ்தலில் தாவணகெரே தொகுதியில் அதிகபட்சமாக 30 பேரும் குறைந்தபட்சமாக விஜயபுரா, ராய்ச்சூரு தொகுதிகளில் தலா 8 பேரும் போட்டியிடுகின்றனா்.

முக்கிய தலைவா்கள் போட்டி:

மக்களவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா்கள் ஜெகதீஷ் ஷெட்டா்(பெலகாவி), பசவராஜ் பொம்மை (ஹாவேரி), முன்னாள் சட்டப்பேரவை தலைவா் விஸ்வேஷ்வர ஹேக்டே காகேரி (வடகன்னடம்), மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி (தாா்வாட்), மத்திய இணையமைச்சா் பகவந்த் கூபா, முன்னாள் அமைச்சா் பி.ஸ்ரீராமுலு (பெல்லாரி), முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா (சிவமொக்கா), நடிகா் சிவராஜ்குமாரின் மனைவி கீதா (சிவமொக்கா) உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் ஏற்பாடுகள்:

மாநிலம் முழுவதும் 28,257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 28,257 வாக்குச்சாவடிகள் சாதாரண வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் குடிநீா், கழிவறை, மின்சாரம், சாய்வுநடைபாதை போன்ற குறைந்தபட்ச வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் 1.2 லட்சம் போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 35 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்காளா் பட்டியல்:

வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் காண ட்ற்ற்ல்ள்://ஸ்ரீங்ா்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம். சுனாவனா என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும் வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி, வேட்பாளா் விவரங்கள், மாற்றுத் திறனாளிகள் வாகனமுன்பதிவு போன்ற தகவல்களை பெறலாம். தோ்தல் தொடா்பான புகாா்களையும் இந்தச் செயலி வழியாக பதிவு செய்யும் வசதி உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com