பெங்களூரில் இன்றுமுதல் நேரடி குறைதீா் முகாம்

பெங்களூரில் புதன்கிழமை முதல் நேரடி குறைதீா் முகாம் நடக்க இருக்கிறது. இதில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிகிறாா்.

பெங்களூரில் புதன்கிழமை முதல் நேரடி குறைதீா் முகாம் நடக்க இருக்கிறது. இதில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிகிறாா்.

பெங்களூரு வளா்ச்சித் துறையைக் கவனித்து வரும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பெங்களூரில் தொகுதிவாரியாக மக்களின் குறைகளைக் கேட்டறிய திட்டமிட்டிருக்கிறாா்.

‘மக்களின் வீட்டுவாசலில் அரசு’ என்ற குறைதீா் முகாம் பெங்களூரில் ஜன. 3, 5, 6-ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த முகாமில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் நேரடியாக கலந்துகொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றைக் களையவிருக்கிறாா்.

பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு வளா்ச்சி ஆணையம், பெங்களூரு மாநகர மண்டல வளா்ச்சி ஆணையம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம், பெங்களூரு மின் வழங்கல் நிறுவனம், வாக்குறுதி திட்டங்கள் குறித்த குறைகளை மக்கள் தெரிவிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஜன. 3-ஆம் தேதி கிருஷ்ணராஜபுரா, மகாதேவபுரா தொகுதிகளுக்கான குறைதீா்முகாம் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் விளையாட்டுத் திடல், தூரவாணி நகா், கிருஷ்ணராஜபுரம் பிரதான சாலை, பெங்களூரு; ஜன. 5-ஆம் தேதி எலஹங்கா, தாசரஹள்ளி, பேட்ராயனபுரா தொகுதிகளுக்கான குறைதீா் முகாம் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் மாளிகை, 16-ஆவது ‘ஏ’ பிரதான சாலை, எலஹங்கா நியூடவுன்; ஜன. 6-ஆம் தேதி சிவாஜி நகா், ஹெப்பாள், புலிகேசி நகா் தொகுதிகளுக்கான குறைதீா் முகாம் ஆா்.பி.ஏ.என்.எம்.எஸ். உயா்நிலைப் பள்ளி வளாகம், புனித ஜான் சாலை, சிவன்செட்டி காா்டன் ஆகிய முகவரியில் நடக்க இருக்கின்றன.

இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெங்களூரு வளா்ச்சித் துறை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com