வயசு...பழசு...புதுசு...: பழனியப்பா பிரதர்ஸ்

சென்னை, ஜன. 7: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் பழனியப்ப செட்டியாரால் இப்பதிப்பகம் திருச்சியில் தொடங்கப்பட்டது.   முதன்முதலில் பதிப்பகம் சார்பில் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்
வயசு...பழசு...புதுசு...: பழனியப்பா பிரதர்ஸ்

சென்னை, ஜன. 7: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் பழனியப்ப செட்டியாரால் இப்பதிப்பகம் திருச்சியில் தொடங்கப்பட்டது.   முதன்முதலில் பதிப்பகம் சார்பில் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கோனார் தமிழ் உரை நூல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

 தற்போது சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் கிளை பரப்பியுள்ள பதிப்பகம் சார்பில் 1000 நூல்களுக்கும் மேலாக வெளியிடப்பட்டுள்ளன.

பெரும்பாலும் மாணவ, மாணவியருக்கான நூல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ள இப்பதிப்பகம் நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள், காந்தியடிகளின் வாழ்க்கை, பட்டினத்தார் பாடல்கள், திருவாசகம் உள்ளிட்டவையும் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்கள் என்கிறார் பதிப்பக உரிமையாளர் ப.செல்லப்பன்.

 சமீபத்தில் கோகுல் ஷேசாத்திரியின் பைசாசம், ராஜகேசரி ஆகிய வரலாற்று புதினங்களும் திவாகரின் எஸ்எம்எஸ் எம்டன், நரசய்யாவின் ஆலவாய், மதரசா பட்டிணம், கம்போடியா கடல்வழி உள்ளிட்டவையும் வெளியிடப்பட்டுள்ளன.

 பெ.தூரனின் சிறுவர் சிறுகதைக் களஞ்சியம், செல்லகணபதியின் பாப்பா பாடல்கள் குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பால்ஸ்}தமிழ்}தமிழ் அகராதி நூலும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com