பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க ரூ. 5 கோடி

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில சூழலியலை மீட்டெடுக்க 2013-14ஆம் ஆண்டில் ரூ. 5 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில சூழலியலை மீட்டெடுக்க 2013-14ஆம் ஆண்டில் ரூ. 5 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:

112 பறவை இனங்கள், 21 ஊர்வன இனங்கள், 9 நீர்நில வாழ் இனங்கள், 46 வகை மீன்கள், 7 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆகியவற்றுக்கு சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வாழ்விடமாக உள்ளது.

2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியலை மீட்டெடுத்துப் பாதுகாக்க ரூ. 15.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2012-13-ம் ஆண்டில் உறைவிட மேம்பாடு, பாதுகாப்பு, ஆராய்ச்சி, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு ரூ. 5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2013-14ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com