தடையை மீறி முஸ்லிம் அமைப்பினர் போராட்டம்: 1,500 பேர் கைது

காவல்துறையின் தடையை மீறி சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் (தமுமுக) சேந்த 1,500-க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.
தடையை மீறி முஸ்லிம் அமைப்பினர் போராட்டம்: 1,500 பேர் கைது

காவல்துறையின் தடையை மீறி சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் (தமுமுக) சேந்த 1,500-க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.

முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன்பிருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி சனிக்கிழமை பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த போராட்டத்துக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தமுமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரணிக்கு வாகனங்களில் வந்த தமுமுகவினரை சென்னைக்கு வெளியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தனர். ரயில் மூலம் சென்ட்ரல், எழும்பூர் வந்தவர்களும் தடுத்து நிறுதத்ப்பட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியலில் ஈடுபட்ட சுமார் 1,500 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆதித்தனார் சிலை ரவுண்டானாவில் போராட்டம்: இந்நிலையில் மாலை 3 மணியில் இருந்து எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகே தமுமுகவினர் குவிந்தனர். போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. பேரணியாகச் செல்ல முடியாததால் தமுமுகவினர் அங்கேயே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் மட்டுமன்றி அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சாலை உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் தமுமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் தமுமுக மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர், துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com