மதுவுக்கு எதிராகப் போராடுவது சமூகக் கடமை: தமிழருவி மணியன்

மதுவுக்கு எதிராகப் போராடுவது சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை என காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
மதுவுக்கு எதிராகப் போராடுவது சமூகக் கடமை: தமிழருவி மணியன்

மதுவுக்கு எதிராகப் போராடுவது சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை என காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.
 சென்னை கல்லீரல் அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்லீரல் நலன் குறித்த கண்காட்சி நிறைவு விழாவில் தமிழருவி மணியன் பேசியதாவது: மதுவுக்கு எதிராகப் பேசுவது என்பது சமுதாயத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் உடலையும், உள்ளத்தையும் நலமுடன் வைத்திருக்க மதுவைத் தொட மாட்டோம் என ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் முடிவெடுத்தால், தமிழகத்தில் குடிப்பதற்கு மதுக்கடைகளே இருக்காது. மது விற்பனையும் நின்று போகும் என்றார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது, மதுவின் பிடியிலிருக்கும் சமூகத்தை மீட்டெடுக்க மதுவுக்கு எதிரான போராட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.
 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கூறும்போது, பதவியிலிருந்து நான் ஓய்வு பெற்ற பிறகு என் வாழ்நாளின் இறுதி வரை மதுவால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியினை மேற்கொள்வேன் என்றார்.
 இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி டாக்டர் ஆர்.பி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com