சென்னை நங்கநல்லூர், மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் தொடர்ந்து 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
நங்கநல்லூர்: சென்னை நங்கநல்லூர் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளில் தேர்வு எழுதிய 156 பேரும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 57 பேர், கணிதத்தில் 19 பேர், அறிவியலில் 11 பேர் என 87 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மடிப்பாக்கம்: சென்னை மடிப்பாக்கம் பள்ளியில் தேர்வு எழுதிய 174 பேரும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 46, அறிவியலில் 22, கணிதத்தில் 15 பேரும் என 83 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.