"நெட்' தேர்வு: சென்னைப் பல்கலை.யில் இலவசப் பயிற்சி

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலமாக நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கு (நெட்) சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசப் பயிற்சி

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலமாக நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கு (நெட்) சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் நெட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம்.
2017 -ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு வரும் நவம்பர் 5 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இலவசப் பயிற்சி குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் பயன்பெறும் வகையில், பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசனை மையம் சார்பில் இந்த இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 7 முதல் 29 -ஆம் தேதி வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
இதற்கான விண்ணப்ப விநியோகம் செப்டம்பர் 18 -ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மைய இயக்குநரை (பொறுப்பு) 044 - 2539 9518 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com