எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பீலிக்கான் முனீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அங்காள ஈஸ்வரி, ஆஞ்சநேயர் பிரதிருஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்.
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பீலிக்கான் முனீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அங்காள ஈஸ்வரி, ஆஞ்சநேயர் பிரதிருஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்.

எண்ணூர் கோயிலில் அங்காள ஈஸ்வரி, ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை கும்பாபிஷேகம்

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பீலிக்கான் முனீஸ்வரர் கோயிலில் அங்காள ஈஸ்வரி, ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பீலிக்கான் முனீஸ்வரர் கோயிலில் அங்காள ஈஸ்வரி, ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோர் குடியிருப்பு உள்ளது. 1964-ஆம் ஆண்டு அன்றைய பர்மா நாட்டில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாடு திரும்பினர். இவர்களுக்கு வியாசர்பாடி, செங்குன்றம், எண்ணூர் ஆகிய இடங்களில் குடியிருப்பு வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. இவர்களில் பெரும்பாலானவர்கள் பர்மாவில் வசித்தபோது பீலிக்கான் முனீஸ்வரர், அங்காள ஈஸ்வரியை குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். பர்மாவிலிருந்து பிடிமண் எடுத்து வரப்பட்டு எண்ணூரில் சிறிய அளவில் பீலிக்கான் முனீஸ்வரர் கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் 15 நாள்களுக்கு சிறப்பு விழாக்கள் நடைபெற்று வந்தன.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கிராமிய கலாசாரத்துடன் திருவிழா நடைபெறும் முக்கிய கிராமங்களில் முதன்மையானது எண்ணூர் அன்னை சிவகாமி நகர். இங்கு சமீபத்தில்தான் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
ரூ.1.50 கோடி செலவில் புதிய சிலைகள்: இந்நிலையில் ரூ.1.50 கோடி செலவில் 45 அடி உயர அங்காள ஈஸ்வரி சிலையும், 43 அடி உயரத்திற்கு ஆஞ்சநேயர் சிலையும் வடிவமைக்கப்பட்டு இதற்கான பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலசங்கள் பொருத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் சிலைகளின் மீது ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயிலில் 52-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கும்பாபிஷேக விழாவில் திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், ஆலய நிர்வாகக் குழு தலைவர் தம்பியா என்ற தமிழரசன், செயலாளர் தனபாலன், கிராம நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஜெயராமன், தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com