பரங்கிமலை ரயில் விபத்து: செப்.22 இல் பொறியாளரிடம் விசாரணை

சென்னை பரங்கிமலை ரயில் விபத்து குறித்து எலக்ட்ரிக்கல் பொறியாளரிடம் செப்டம்பர் 22 -ஆம் தேதி போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.


சென்னை பரங்கிமலை ரயில் விபத்து குறித்து எலக்ட்ரிக்கல் பொறியாளரிடம் செப்டம்பர் 22 -ஆம் தேதி போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூருக்கு ஜூலை 24 -ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவர்கள், பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையினான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்டமாக, விபத்து நடந்த ரயிலின் கார்டு, ஓட்டுநர், கடற்கரை, கிண்டி, பரங்கிமலை ஆகிய ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோரிடம் கடந்த 8 -ஆம் தேதியும், இரண்டாம்கட்டமாக ரயில் இயக்க அதிகாரி, தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரிடம் கடந்த 15 -ஆம் தேதியும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ரயில்வே எலக்ட்ரிக்கல் பொறியாளரிடம் செப்டம்பர் 22 -ஆம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது, கேபிள் துண்டிப்பு மற்றும் மின்சார ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது: விபத்து நடைபெற்ற மின்சார ரயிலில் பயணிகள் படியில் தொங்கிக் கொண்டு சென்றபோது, கார்டு எச்சரிக்கை செய்து இருக்கலாம் என்று பயணிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com