"பாஜக ஆட்சியுடன் அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும்'

மத்தியில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்போது,  தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
"பாஜக ஆட்சியுடன் அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும்'

மத்தியில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்போது,  தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:
மத்திய பாஜக அரசு மதவெறிப் பிடித்த அரசாக உள்ளது. நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலைப்படாத அரசாக உள்ளது. அந்த ஆட்சியை அகற்ற வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிரதமர் மோடியின் காரணமாகவே அதிமுக ஆட்சி தமிழகத்தில் நீடித்து வருகிறது. 
மக்களவைத் தேர்தலுடன் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் எண்ணிக்கை 97}ஆகும்.  22 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறப் போகிறது. 
இந்த 22 உறுப்பினர்களையும் சேர்த்தால் பேரவையில் திமுகவின் 119 ஆகிவிடும். சட்டப்பேரவையில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க 118 இடங்கள் இருந்தால் போதுமானதாகும். இதன் மூலம் பெரும்பான்மை இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அகற்றப்படும். மோடிக்கு எதிரான குரல் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில் மக்களிடம் இருந்த நல்ல பணத்தையெல்லாம் செல்லாத பணமாக்கி மோடி அலையவிட்டார். இதனால், வணிகர்கள் தொடங்கி, அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தையெல்லாம் மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார். ரூ.15}ஐ கூட போடவில்லை.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை திராவிடக் கொள்கையை ஏற்றுக்கொண்ட அறிக்கையாக உள்ளது. இது கருணாநிதி இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல். கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆறடி இடம்கூட கொடுக்க அதிமுக அரசு மறுத்தது. அந்த அரசுக்கு தமிழகத்தில் இடம் அளிக்கக் கூடாது  என்றார்.
அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com