தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை: பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

சென்னையில் உரிமம் இல்லாத, தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சென்னையில் உரிமம் இல்லாத, தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 சென்னையில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சமைப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கேன்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு நாளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு, தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் சில, உரிய அனுமதி பெறாமல் தரமற்ற முறையில் தண்ணீர் கேன்களை விற்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, இதுபோன்ற சுகாதாரமற்ற போலி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, தண்ணீர் கேன்களில் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, ஐஎஸ்ஐ முத்திரை, உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் எண் உள்ளிட்டவை அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். 
வாட்ஸ் ஆப்' எண்ணில்...: இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியது:  கோடை காலம் என்பதால் தண்ணீர் கேன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி லாபநோக்கில், உரிமம் இன்றி தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. 
நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, ஐஎஸ்ஐ முத்திரை, எஃப்எஸ்எஸ்ஐ உரிமம் எண் இல்லாமல் தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் 94440 42322 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆஃப்) எண்ணில் புகார் அளிக்கலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com