வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (ஜூன் 27) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில்...: சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்யும். வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஜூன் 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.