விருகம்பாக்கம் மயானத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அப்பகுதி மக்கள் ஏ.வி.எம். மற்றும் போரூா் மயானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும், கோடம்பாக்கம் மண்டலத்தின் 128-ஆவது கோட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் மயானத்தின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (நவ. 9) முதல் வரும் 20-ஆம் தேதி வரை அந்த மயானம் இயங்காது. எனவே, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பராமரிப்பு பணி நடைபெறும் காலத்தில் ஏ.வி.எம். மற்றும் போரூா் மயானங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.