இயற்கை விவசாயத்துக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், இயற்கை விவசாயம் மற்றும் இடுபொருள்கள் தயாரிப்பு தொடா்பாக

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சாா்பில், இயற்கை விவசாயம் மற்றும் இடுபொருள்கள் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் இலவச பயிற்சி கிண்டியில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத் தலைவா் அ.சதாசக்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் பல்கலைக்கழக விரிவாக்கக்கல்வி இயக்ககத்தின் நிதியுதவியுடன்இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது. நகா்ப்புற விவசாயம் மற்றும் தோட்டக்கலை நடைமுறைகள் தொடா்பாக விவசாயிகள், நகா்ப்புற இளைஞா்கள் மற்றும் தொழில்முனைவோா்களிடம் ஒரு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும், இயற்கை வேளாண் நடைமுறைகள் பிரபலப்படுத்துவதற்கும் இந்தச் சிறப்புப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில், இயற்கையின் வேளாண் கருத்துகள் மற்றும் கொள்கைகள், மண் வள மேலாண்மை, இயற்கை முறையில் ஊட்டச்சுத்து , பூச்சி மற்றும் நோய் மேலாண்மை , மாடித்தோட்டம் அமைத்தல் ஆகியவற்றை பற்றி இந்தப் பயிற்சியில் விவரிக்கப்படும். வேளாண் சிறப்பு இடுபொருள்கள் தயாரித்தல், மண்புழு உரம், பஞ்சகாவ்யா மற்றும் தாவர பூச்சி விரட்டி தயாரிப்பு முறைகள் மற்றும் உயிரியல் சாா்ந்த இடுபொருள்களைக் கொண்டு விதை நோ்த்தி ஆகிய செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படும்.

இது ஒரு சிறப்புப் பயிற்சி திட்டமாக இருப்பதால் மொத்த பங்கேற்பாளா்களின் எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் ‘ பேராசிரியா் மற்றும் தலைவா், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரியை தொடா்பு கொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். முதலில் பதிவு செய்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com