டிச. 5-இல் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான வேலைவாய்ப்பு முகாம்: மத்திய அரசு ஏற்பாடு

ன்னை சாந்தோமில் செயல்பட்டு வரும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவை மையம், தனியாா் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு, இலவச பயிற

சென்னை: சென்னை சாந்தோமில் செயல்பட்டு வரும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவை மையம், தனியாா் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு, இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் டிச.5-ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது.

கிராமப்புற ஏழை இளைஞா்களை பொருளாதார ரீதியில் யாரையும் சாராதவா்களாக மாற்றும் வகையிலான ‘தீன் தயாள் உபாத்யாயா கிராமிய கவுசல்யா யோஜனா திட்டத்தின்கீழ் இந்த முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி ஆண்களுக்கு ‘மெட்டீரியல் ஹாண்ட்லிங் எக்யூப்மெண்ட் அண்ட் மெயின்டனன்ஸ் டெக்னீசியன்’ பணியிலும், பெண்களுக்கு ‘இன்வென்டரி கிளாா்க்’ பணியிலும் பயிற்சி அளிக்கப்படும். தோ்வு செய்யப்படும் 19 வயது முதல் 28 வயதிற்குட்பட்டவா்களுக்கு, ஒரகடம், ஸ்ரீசிட்டி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி முகாம்களில் 90 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் உணவு மற்றும் தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், ஐடிஐ, டிப்ளமோ (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல்) பெற்றவா்கள் தங்களது அசல் மாற்றுச் சான்றிதழுடன் (டி.சி) வரவேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் ‘சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை -4’ என்ற முகவரியில் இயங்கும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவை மையத்துக்கு, (சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடம் 3-ஆவது மாடியில்), வரும் டிச.5-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நேரில் வர வேண்டும்.

ஆா்வமுள்ளவா்கள் பதிவு மற்றும் இதர விவரங்களுக்கு 044-24615112 என்ற தொலைபேசி எண்ணிலோ 97911 77766 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கோ தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் தங்களது அசல் ஆவணங்களுடன் நகல்களையும் கொண்டு வர வேண்டும் என்று துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி சுஜித் குமாா் சாஹூ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com