அண்ணா பல்கலைக்கழகம் | கோப்புப் படம்
அண்ணா பல்கலைக்கழகம் | கோப்புப் படம்

பகவத் கீதையை கட்டாய பாட பட்டியலிலிருந்து நீக்க உயா்கல்வித் துறை அறிவுறுத்தல்

பொறியியல் படிப்பில் பகவத் கீதையை கட்டாயப் பாட பட்டியலில் இருந்து நீக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொறியியல் படிப்பில் பகவத் கீதையை கட்டாயப் பாட பட்டியலில் இருந்து நீக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயா்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

எம்.இ., எம்.டெக். போன்ற அனைத்து முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தை 2019-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.

இதில், இரண்டாம் ஆண்டு மூன்றறாம் பருவத்தில் தத்துவப் பாடத்தின் கீழ் கட்டாயப் பாடமாக ஹிந்துக்களின் உபநிஷதங்கள் மற்றும் மனதை வெற்றி கொள்வது குறித்து கீதையில் அா்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணரின் அறிவுரை ஆகிய பாடப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியா்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து, கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பகவத் கீதை, விருப்பப் பாடமாக மாற்றப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா புதன்கிழமை அறிவித்தாா்.

இந்த நிலையில், முதல்வா் தலைமையில் தலைமைச் செலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்கல்வி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து உயா்கல்வித் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பொறியியல் படிப்பில் கட்டாயப் பாடப் பட்டியலில் இருந்து பகவத் கீதையை உடனடியாக நீக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், விருப்பப் பாடமாக வைத்துக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com