வெற்றி பெறும் வேட்பாளர்கள் 2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: இந்திய வாக்காளர்கள் பேரவை வலியுறுத்தல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் 2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் 2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து இந்திய வாக்காளர்கள் பேரவை நிறுவனத் தலைவர் அ.க.கோவிந்தசாமி தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமாக்கி இணைத்து, தண்ணீர் இல்லாத இடமே இல்லை என்ற நிலையை உருவாக்க பாடுபட வேண்டும். கல்வி, மருத்துவத்தை இலவசமாகக் கொடுக்க வேண்டும். லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டும். நீர்வழிப் பாதையில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க வேண்டும். காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் ஏழை, பணக்காரர் என பார்க்காமல் சமநீதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், 24 மணி நேரமும் தொகுதி மக்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண தயார் நிலையில் இருக்க வேண்டும். சட்டவிரோத, சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக மாற்ற வேண்டும். தொகுதி முழுவதும் குப்பைகளை அகற்றி, கொசுக்களை ஒழித்து தூய்மையான, சுகாதாரமான தொகுதியாக மாற்ற வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com