வேலூரில் பணம் பறிமுதல்: குடியரசுத் தலைவரிடம் அறிக்கை

வேலூர் மக்களவைத் தொகுதியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆதரவாளர்களிடம்
வேலூரில் பணம் பறிமுதல்: குடியரசுத் தலைவரிடம் அறிக்கை

வேலூர் மக்களவைத் தொகுதியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆதரவாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளது.
 அந்த அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வேலூர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி வருமான வரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் திமுக நிர்வாகிகளிடம் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 11 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தார். வருமான வரித்துறையும் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.
 இந்த அறிக்கைகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்துள்ளது. அதில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com