மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்

மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்

மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மற்றும் 8 ஆண்டு கால அதிமுக ஆட்சியிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை தருவதாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மட்டுமே இருக்கிறது.
 மாநிலங்களுக்கு அதிக உரிமை, வேலைவாய்ப்புப் பெருக்கம், மாநிலப் பட்டியலில் கல்வி, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, விவசாயிகள் 5 பவுன் வரை வைத்துள்ள நகைக்கடன்கள் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளோம். ஆட்சி அமைந்ததும் சாத்தியமாகக் கூடிய வாக்குறுதிகள் இவை என்பதற்கான அத்தாட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு ரத்து, மாநிலப் பட்டியலில் கல்வி, மாநிலங்களுக்கான கூடுதல் உரிமைகள் உள்ளிட்ட பலவும் இடம்பெற்று, திராவிடத்தை தேசியம் தழுவி நிற்கிறது.
 மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் சிலரும் அமைத்திருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத, சுயநலக் கூட்டணி என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். நாட்டை இருட்டில் தள்ளி பின்னோக்கி ஆட்சிகளை ஒருசேர விரட்டிட ஏப்ரல் 18-இல் தீர்ப்பெழுதுங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை விரும்பிடும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் விழிப்புடன் செயல்பட்டாக வேண்டியது கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com