விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் புதன்கிழமையும் (ஏப்.24), அரியலூரில் வியாழக்கிழமையும் (ஏப்.25) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் புதன்கிழமையும் (ஏப்.24), அரியலூரில் வியாழக்கிழமையும் (ஏப்.25) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். 
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் பொன்பரப்பியில் அதிமுக கூட்டணியைச் சார்ந்த பாமக மற்றும் பாஜக, இந்துமுன்னணியைச் சேர்ந்தவர்கள் கூட்டுச் சேர்ந்து தலித் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்து நடத்திய கொலைவெறித் தாக்குதலை நாடே அறியும். இந்த வன்முறையால் நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துகளால் வாக்களிக்க இயலவில்லை. பொன்பரப்பியில் நடந்த இக்கொடூரத்தால் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த கிராமங்களைச் சார்ந்த தலித்துகளும் அச்சத்துக்குள்ளாகி பிற்பகல் 3 மணிக்குமேல் வாக்களிக்கச் செல்லாமல் தவிர்த்தனர் என்றும் தெரியவருகிறது. 
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு, பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வலியுறுத்தவும் விசிகவின் ஒருங்கிணைப்பில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் சென்னையில் புதன்கிழமையும் அரியலூரில் வியாழக்கிழமையும் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com