மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை தீவு திடலில், மார்பகப் புற்றுநோய் குறித்தும் உடல் ஆரோக்கியம் குறித்தும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட மாரத்தான் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 இந்திய பெண்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் ஆண்டுதோறும் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்று வருகிறது. அதன்படி 6 -ஆம் ஆண்டு விழிப்புணர்வு மாரத்தான் சென்னை தீவுத்திடல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி மற்றும் நடுத்தர வயது கொண்ட பெண்கள் என 5 ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். முன்னதாக சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் சியாமளா தேவி கொடியசைத்து விழிப்புணர்வு மாரத்தானை தொடங்கி வைத்தார். காமராஜர் சாலை, பல்லவன் சாலை வழியாக நடைபெற்ற மாரத்தான் மீண்டும் தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com