மழைநீர் சேகரிப்பு பிரசாரம்: சத்குரு ஆதரவு

மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மழைநீர் சேகரிப்பு பிரசாரம்: சத்குரு ஆதரவு

மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட காணொலி காட்சியில் கூறியிருப்பது: 
நீரைச் சேமிக்க வேண்டும் என்ற ஞானம் தமிழ்நாட்டுக்கு மிக அவசியம். இதற்காக தமிழக அரசு "மழைநீர் சேகரிப்பு'என்ற சிறப்புத் திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. நாம் எல்லோரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டில் நீருக்கு இருக்கும் ஒரே ஒரு மூலம் மழை தான். 
தமிழகத்தில் தோராயமாக 45 முதல் 60 நாள்களுக்கு மட்டும் தான் மழை பெய்கிறது. 60 நாள்களில் கிடைக்கும் மழை நீரை, 365 நாள்களுக்கு நாம் மண்ணில் பிடித்து வைத்துகொள்ள வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக மரங்கள், செடி, கொடிகள், புல்வெளிகள் என அனைத்து விதத்திலும் தேவையான அளவு பசுமையை உருவாக்க வேண்டும். 
இதற்கு சிறந்த வழி கிராமங்களில் விவசாயிகள் வேளாண் காடு வளர்க்கும் முறைக்கு மாற வேண்டும். நகரங்களில் மழைநீர் சேகரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். 
இதற்காக அனைத்துத் தமிழர்களும் தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை கட்டாயம் செய்ய வேண்டும். இந்த ஞானம் இல்லாமல் நாம் செயல்பட்டால் நம் குழந்தைகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஆதரிக்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com