மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸ் விசாரணை
By DIN | Published On : 11th August 2019 04:07 AM | Last Updated : 28th January 2020 12:15 PM | அ+அ அ- |

சென்னை அருகே பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபர் குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் 28 வயது மதிக்கத்தக்க வாய் பேச முடியாத, காது கேட்காத, ஒரு கண்ணில் பார்வையில்லாத நிலையில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் தனது உறவினருடன் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணை கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காணவில்லை. இதையறிந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் அந்தப் பெண்ணை தேடினர். இந்நிலையில் தீவிர தேடுதலுக்கு பின்னர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு காலி குடிசையில் அந்த பெண்ணை அவர்கள் மீட்டனர். இதில் அந்தப் பெண்ணை ஒரு நபர் மது அருந்தச் செய்து, அவர் போதையில் இருக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.