பருவ மழை: மின்மாற்றிகளை முன்கூட்டியே பராமரிக்கும் பணி தீவிரம் 

மழைக் காலத் தை ஒட்டி, மின்மாற்றிகளை பராமரிக்கும் பணிகளை மின்வாரியம் முடுக்கி விட்டுள்ளது.

மழைக் காலத் தை ஒட்டி, மின்மாற்றிகளை பராமரிக்கும் பணிகளை மின்வாரியம் முடுக்கி விட்டுள்ளது.
 தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
 அதேபோல் 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சத்துக்கு அதிகமான வணிகம் சார்ந்த மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
 இதனை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கி வருகிறது. இதற்கான விநியோகமானது ஆங்காங்கே பிரிவு அலுவலகம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், பல இடங்களில் மின் பெட்டிகள் திறந்து கிடப்பதாகவும், மின்கம்பிகள் அறுந்து தொங்குவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் மழை பெய்யும் போது மின்கசிவு ஏற்பட்டு விபத்து உண்டாக வாய்ப்பு உள்ளது.
 இதனால் பொது மக்கள் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் அவதியடையும் சூழலும் உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை சீரமைக்க மின் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
 இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியது: வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின்மாற்றி பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட சாதனங்களின் இப்போதைய நிலை உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
 இதே போன்று மின்மாற்றியின் அளவு, நிலத்தின் தன்மை, கடைசியாக பராமரித்த நாள் குறித்தும் ஆய்வு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் மின்மாற்றிகள் பருவ மழைக்கு முன்பாகவே சீரமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com