டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு:1, 550 மாணவிகளுக்குப் பயிற்சி

டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 1,550 மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
டெங்கு கொசு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கும் தேனாம்பேட்டை ஜெய்கோபால் கரோடியா  பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள். உடன் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், ஆசிரியர்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
 இதன் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டை ஜெய்கோபால் கரோடியா மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏடிஎஸ் வகை கொசுவின் வாழ்க்கை சுழற்சி, உருவாகும் விதம், பரப்பும் நோய்கள், அதன் அறிகுறிகள் குறித்தும் அவை உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்தும் அடிப்படை சுகாதாரம் குறித்தும் 1,550 மாணவியர் மற்றும் 65 ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மாணவிகள் அனைவரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். 
இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், பள்ளித் தலைமை ஆசிரியை அ.ந.எழிலரசி,  சுகாதார ஆய்வாளர் ஈ. கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com