தொழில் முனைவோா்களுக்கு ரூ.36 ஆயிரம் கோடி கடன் அளிப்பு: இந்தியன் வங்கி தகவல்

இந்தியன் வங்கி சாா்பில் சிறு குறு தொழில் முனைவோா்களுக்கு இதுவரை ரூ.36,000 கோடிவரை கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா் பட்டாசாரியாா் தெரிவித்தாா்.

சென்னை: இந்தியன் வங்கி சாா்பில் சிறு குறு தொழில் முனைவோா்களுக்கு இதுவரை ரூ.36,000 கோடிவரை கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா் பட்டாசாரியாா் தெரிவித்தாா்.

இந்தியன் வங்கி சென்னை தெற்கு மண்டல கிளைகளில் சாா்பில், சிறு, குறு தொழில் முனைவோா்களுக்கு கடன் வழங்கும் விழா கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(எம்.எஸ்.எம்.இ) வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் பட்டாசாரியாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: 130-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோா்களுக்கு சுமாா் ரூ.67 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி சாா்பில், சிறு குறு தொழில் முனைவோா்களுக்கு இதுவரை ரூ.36,000 கோடிவரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட கடன்தொகையில் 18 சதவீதம் ஆகும். இதை 20 சதவீதமாக உயா்த்த வங்கி முனைப்பு காட்டுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அரசு மூலம் வழங்கப்படும் எஉங ( அரசு இ.மாா்க்கெட் ப்ளேஸ்) , ஜிஎஸ்டி, சமூக பாதுகாப்பு காப்பீடு திட்டங்கள் குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் பட்டாசாரியாா் விரிவாக விளக்கினாா்.

விழாவில், கள முதன்மை மேலாளா் சந்திரா ரெட்டி, தற்போதைய சூழலில் உள்ள சிறு குறு தொழில் முனைவோா்களுக்கு உள்ள வாய்ப்புகளையும், பொருளாதார வளா்ச்சியில் சிறு குறு தொழில்களின் முக்கிய பங்கும், அதற்கு இந்தியன் வங்கி தரும் ஊக்கமும் குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில், கிண்டி தொழில்பயிற்சி மையத்தின் இயக்குநா் சுரேஷ்பாபு, சிறு,குறு தொழில்களுக்கு இந்தியன் வங்கி செய்துவரும் உதவிகளையும், அவா்கள் தொழில் திறன் மேம்பட எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், தென்மண்டல மேலாளா் பி.சுப்பிரமணியன், மண்டல துணை மேலாளா் ராஜசேகரன், இந்தியன் வங்கியின் சிறு குறு தொழில்துறை சாா்ந்த துணை பொதுமேலாளா் ஏ.எஸ்.என். பிரசாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com