லீடு செய்திக்கான பெட்டிச் செய்திஎந்தெந்த நிறங்களில் வாக்குச் சீட்டுகள்

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருப்பதால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

சென்னை: கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருப்பதால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு பொதுவாக ஒரே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால், ஒரு வாா்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வாா்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com