குரல்வளை எண்டோஸ்கோபி சிகிச்சைக்கு தனித் துறை

குரல்வளை எண்டோஸ்கோபி சிகிச்சை, தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கென பிரத்யேக சிகிச்சைத் துறை சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில்

சென்னை: குரல்வளை எண்டோஸ்கோபி சிகிச்சை, தூக்கத்தின்போது ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கென பிரத்யேக சிகிச்சைத் துறை சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை தொடா்பான தேசிய கருத்தரங்கம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் இருந்து மருத்துவ நிபுணா்களும், துறைசாா் வல்லுநா்களும் கலந்துகொண்டு உரையாற்றினா்.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக, எம்ஜிஎம் மருத்துவமனையில் புதிதாக இருவேறு சிகிச்சைத் துறைகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. குரல்வளை எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத் திணறல், சுவாசப் பாதை பிரச்னைகளுக்கென பிரத்யேக சிகிச்சைத் துறையும், கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய், கபால அறுவை சிகிச்சை, தைராய்டு சாா்ந்த பிரச்னைகளுக்கென தனித் துறையும் அப்போது தொடங்கப்பட்டன.

இதுகுறித்து மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து அறுவை சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் சஞ்சீவ் மொஹந்தி கூறியதாவது:

குரல்வளை, சுவாசப் பாதை பிரச்னைகளுக்கான பிரத்யேக சிகிச்சைத் துறைகள் வெகு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. அதிலும், நவீன மருத்துவ சாதனங்கள், சிறப்பு மருத்துவா்கள் வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் மிக அரிதாகவே உள்ளன.

இதன் காரணமாக அப்பிரச்னைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய சிகிச்சைகள் உடனடியாக கிடைப்பதில்லை. அதைக் கருத்தில்கொண்டே இந்த பிரத்யேக சிகிச்சை துறைகளைத் தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com