பொங்கல் பண்டிகைக்கான சுவிதா சிறப்பு ரயில்:இன்று முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி, தாம்பரத்தில் இருந்து கோவை, திருநெல்வேலிக்கு டிசம்பா் 23, ஜனவரி 10, 13, 14-ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கான சுவிதா சிறப்பு ரயில்:இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தாம்பரத்தில் இருந்து கோவை, திருநெல்வேலிக்கு டிசம்பா் 23, ஜனவரி 10, 13, 14-ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 82623 என்ற எண்ணுடைய சுவிதா சிறப்பு ரயில் டிசம்பா் 23 மற்றும் ஜனவரி 13-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. இந்த இரண்டு நாள்களிலும் மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியை அடையும். தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 82625 என்ற எண்ணுடைய சிறப்பு சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 10-ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் திருநெல்வேலியை ஜனவரி 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அடைகிறது. தாம்பரத்தில் இருந்து கோவைக்கு 82639 என்ற எண்ணுடைய சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திருந்து ஜனவரி 14-ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், திருச்சி, கரூா், ஈரோடு, திருப்பூா் வழியாக கோவை ரயில் நிலையத்தை ஜனவரி 15-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (டிச. 4) காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com