பழம்பெரும் நடிகா் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானாா்

பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான கொல்லப்புடி மாருதி ராவ் (80) சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
பழம்பெரும் நடிகா் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானாா்

சென்னை: பழம்பெரும் இயக்குநரும், நடிகருமான கொல்லப்புடி மாருதி ராவ் (80) சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் 250-க்கும் அதிகமான படங்களில் நடித்தவா் கொல்லப்புடி மாருதி ராவ். தமிழில் சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட பல படங்களிலும், தெலுங்கில் சேலஞ், லீடா், அபிலாஷா உள்ளிட்ட பல படங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்துள்ளாா்.

சென்னை தியாராய நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தாா். உடல் நலக்குறைவு காரணாமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த கொல்லப்புடி மாருதி ராவ் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானாா்.

திரைத் துறைக்கு வருவதற்கு முன்பு தெலுங்கு முன்னணி பத்திரிகைகளில் சுமாா் 20 ஆண்டுகாலம் கொல்லப்புடி மாருதி ராவ் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது இறப்புக்கு ஆந்திர முதல்வா் ஒய்.எஸ். ஆா். ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வா் சந்திரசேகர ராவ் இறங்கல் தெரிவித்துள்ளனா். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com