எனக்குப் பிடித்த புத்தகங்கள்: மனநல மருத்துவர் ருத்ரன்

எனக்குப் பிடித்த புத்தகங்களைச் சொல்வதென்றால் மகாகவி பாரதியாரின் கவிதைகளைத்தான் முதலில் சொல்ல வேண்டும். கவிதையைப் புதிய மொழியில்
எனக்குப் பிடித்த புத்தகங்கள்: மனநல மருத்துவர் ருத்ரன்


எனக்குப் பிடித்த புத்தகங்களைச் சொல்வதென்றால் மகாகவி பாரதியாரின் கவிதைகளைத்தான் முதலில் சொல்ல வேண்டும். கவிதையைப் புதிய மொழியில் வெளிப்படுத்தியவன் அவன். பழந்தமிழ் நூல்களில் கம்பராமாயணம் மிகவும் பிடிக்கும். லா.ச.ராமாமிர்தத்தின் நாவல்கள், சிறுகதைகள் பிடிக்கும். அவருடைய உரைநடையைப் படிக்கும்போது உரைநடையா, கவிதையா என்று அடிக்கடி சந்தேகம் ஏற்படும். அந்த அளவுக்கு கவித்துவம் உள்ள மொழிநடை. 
சுகுமாரன் எழுதிய பெருவலி, முகலாய அரச குடும்பப் பெண்களின் நிலையை - பெரும் வலியைச் சொல்லும் நாவல் . அது எனக்குப் பிடிக்கும். 
இந்திய அளவிலான இலக்கியப் பரிசுகள் எதுவும் தரப்படாத வண்ணநிலவனின் எல்லாப் புத்தகங்களும் எனக்குப் பிடிக்கும். அவருடைய கடல்புரத்தில், எஸ்தர் , கம்பா நதி, ரெயினீஸ் ஐயர் தெரு உள்பட அனைத்து நூல்களும் என்னைக் கவர்ந்தவை. 
காஃப்கா எழுதிய தி ட்ரயல், தி கேஸில் ,  எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட் இன்னும் பல புத்தகங்கள் எனக்குப் பிடித்தவை. 
ஆங்கில மொழி மீது எனக்குக் காதல் ஏற்பட காரணமாக இருந்தவை ஷேக்ஸ்பியர் எழுதிய நூல்கள். 
ராகுல சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை,  ஊர்சுற்றிப் புராணம் மற்றும் அவருடைய தத்துவ விளக்க நூல்கள் எல்லாம் எனக்குப் பிடித்தவை. பிரபஞ்சன் எழுதிய முட்டை நாடகம். சமீபத்தில் வெளிவந்த புத்தகங்களில் எனக்குப் பிடித்தது, 
ஜெ.தீபலட்சுமியின் இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை என்ற புத்தகம்தான் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com