மத்திய கைலாஷில் மீண்டும் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை அடையாறில் மத்திய கைலாஷில் மீண்டும் பள்ளம் விழுந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அடையாறு மத்திய கைலாஷ் கோயில் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் பள்ளம்.
அடையாறு மத்திய கைலாஷ் கோயில் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் பள்ளம்.


சென்னை அடையாறில் மத்திய கைலாஷில் மீண்டும் பள்ளம் விழுந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இதுகுறித்த விவரம்:
அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து தொடங்கும் ராஜீவ் காந்தி சாலை சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா வரை செல்கிறது. இந்த சாலையில் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் ராஜீவ்காந்தி சாலை வழியாக இந்த நிறுவனத்துக்கு செல்கின்றனர். இதனால் இச் சாலை 24 மணி நேரமும் வாகன நெரிசலுடன் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த சாலையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென மிகப்பெரிய பள்ளம் விழுந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள்  உடனே போலீஸாருக்கும், மாநகராட்சிக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு வேறு ஏதேனும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு சாலைத் தடுப்புகளை வைத்தனர்.
 தகவலறிந்த மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் கழிவுநீர் அகற்றல் வாரிய நிறுவன அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, அங்கு திடீரென பள்ளம் விழுந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் அங்கு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைச் சரியாக மூடாமல் சென்றதால், திடீரென பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததாம்.
இதையடுத்து வியாழக்கிழமை அந்த பள்ளத்தை மூடும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் பள்ளம் ஆழமாக பெரிய அளவில்  இருந்ததால், அதை மூடுவதில் இடர்பாடு ஏற்பட்டது. இந்த இடத்தில் ஏற்கெனவே கடந்த மே மாதம் 27-ஆம் தேதி பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com