மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்: சுதா சேஷய்யன்

மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்களையும், செயற்கை நுண்ணறிவு சாதனங்களையும் (ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ்)  புகுத்துவது மிகவும் அவசியம் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின

மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்களையும், செயற்கை நுண்ணறிவு சாதனங்களையும் (ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ்)  புகுத்துவது மிகவும் அவசியம் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.
மகப்பேறு தொடர்பான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகளையும், கருப்பை சிசு வளர்ச்சியைக் கண்டறியும்  பரிசோதனைகளையும் எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கு பயிற்சி அளிக்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மெடிஸ்கேன் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
முழுக்க, முழுக்க நவீன தொழில்நுட்ப சாதனங்கள் நிறுவப்பட்டுள்ள அந்த ஆய்வகத்தில் ஸ்கேன் பயிற்சி மேற்கொள்ள புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதாவது, அந்தப் பரிசோதனைகளுக்கு கர்ப்பிணிகள், நோயாளிகளைப் பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு சாதனங்களில் உள்ள மாதிரி தரவுகளின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் அந்த ஆய்வகத்தை டாக்டர் சுதா சேஷய்யன் சனிக்கிழமை திறந்து வைத்தார். அந்த நிகழ்வின்போது அவர் பேசியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கேன் பரிசோதனைகளை எல்லோராலும் மேற்கொள்ள இயலாத நிலை இருந்தது. ஏனெனில் அந்த வசதிகள் அனைத்துத் தரப்பினரையும் அப்போது சென்றடையவில்லை. ஆனால், தற்போது அந்தச் சூழல் இல்லை. கர்ப்பிணிகளும், பெண்களும் மிகச் சுலபமாக ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதை சமீபகாலமாக காண முடிகிறது.
பொதுவாக மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு போன்ற விஷயங்கள் வருவது வரவேற்கத்தக்கது. இத்தகைய மாற்றங்கள் அவசியமானதும் கூட.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டும் எதிர்வரும் கல்வியாண்டில் முதுநிலை மகப்பேறு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 55-ஆக அதிகரித்துள்ளது.
அந்த அளவுக்கு மகப்பேறு மருத்துவத்தின் தேவைகள் சமூகத்தில் இருக்கின்றன என்பதையே இது உணர்த்துகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவத் துறையில், கருப்பை மற்றும் மகப்பேறு ஸ்கேன் பரிசோதனை பயிற்சிக்கு செயற்கை நுண்ணறிவு முறை அறிமுகமாகியிருப்பது ஆரோக்கியமான ஒன்று என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் மெடிஸ்கேன் சிஸ்டம் நிறுவனத்தின் இயக்குநர்கள் டாக்டர் சுரேஷ், இந்திராணி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com