Enable Javscript for better performance
மகளிர் மணியின் நட்சத்திர சாதனையாளர் விருது : உலக மகளிர் தினமான இன்று சென்னையில் விழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மகளிர் மணியின் நட்சத்திர சாதனையாளர் விருது : உலக மகளிர் தினமான இன்று சென்னையில் விழா

    By DIN  |   Published On : 08th March 2019 04:35 AM  |   Last Updated : 08th March 2019 05:41 AM  |  அ+அ அ-  |  

    artist1


    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தினமணி மகளிர் மணி சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) நடைபெற உள்ளது.  
    சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில்  மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, விருதுகளை வழங்க உள்ளார். விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையேற்கிறார்.
    இந்த ஆண்டு முதல்...: 
    தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுவது போல, தினமணியின் இணைப்பான மகளிர் மணி சார்பில் உலக மகளிர் தினத்தன்று  சாதனை மகளிருக்கு விருது வழங்கி கௌரவிப்பது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
    அதனடிப்படையில், தமிழ்த் திரையுலகில் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் தங்களின் நடிப்பாற்றலால் மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்ற  நடிகைகள் ஒன்பது பேருக்கு சாதனை நட்சத்திரங்கள் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
    உலக மகளிர் தினமான வெள்ளிக்கிழமை (மார்ச் 8) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வைஜயந்தி மாலா,  சௌகார் ஜானகி,  ஜமுனா, சாரதா, காஞ்சனா, ராஜஸ்ரீ,  கே.ஆர்.விஜயா,  வெண்ணிற ஆடை நிர்மலா,  சச்சு ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.  நிகழ்ச்சியில், விருது பெறும் நட்சத்திரங்களின் சாதனைகளும் அவர்கள் குறித்த பதிவும் இடம் பெறும். 
     

    அனுமதி இலவசம்: இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.  தங்கள் பெயர், தொடர்பு எண்ணுடன் 97909 80880 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் நிகழ்ச்சியில் அவர்களுக்கான இருக்கை உறுதி செய்யப்படும். 
    வாசகர்கள் இதையே அழைப்பாக எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரலாம்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp