அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல்
By DIN | Published On : 02nd May 2019 04:19 AM | Last Updated : 02nd May 2019 04:19 AM | அ+அ அ- |

சென்னையில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவான்மியூரில் இருந்து நுங்கம்பாக்கத்துக்கு ஒரு அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு
புறப்பட்டது. அந்த பேருந்து நுங்கம்பாக்கத்திடம் செல்லும்போது, பின்னால் வந்த ஒரு ஆட்டோவுக்கு வழிவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். இதில் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன. நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.