மே 29-அம்பத்தூரில்  மேலாண்மைத் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தமிழக அரசின் ஏற்றுமதி, இறக்குமதி, ஜி.எஸ்.டி. பயிற்சியுடன் கூடிய இலவச மேலாண்மை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரும் 29-ஆம் தேதி அம்பத்தூரில் தொடங்க உள்ளன.

தமிழக அரசின் ஏற்றுமதி, இறக்குமதி, ஜி.எஸ்.டி. பயிற்சியுடன் கூடிய இலவச மேலாண்மை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரும் 29-ஆம் தேதி அம்பத்தூரில் தொடங்க உள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியன இணைந்து, படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) உடனடி வேலைவாய்ப்புக்கான மேலாண்மைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. 
  இந்தாண்டுக்கான தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான ஜி.எஸ்.டி. ஏற்றுமதி - இறக்குமதி பயிற்சியுடன் கூடிய லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை, கொள்முதல் மேலாண்மை, பொருள்கள் மேலாண்மை,  ஸ்டோர்ஸ் மேலாண்மை பயிற்சிகள் மற்றும் பஹப்ப்ஹ் பயிற்சியுடன் கூடிய கணக்கு உதவியாளர், ஈற்ல் பயிற்சிகளும் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக வழங்கப்பட உள்ளன. 
 இந்தப் பயிற்சி வகுப்புகள் மே  29-ஆம் தேதி தொடங்க உள்ளன. 3 அல்லது 4 மாத கால அளவிலான (முழு நேரம்) இப்பயிற்சிகளுக்கு குறைந்த அளவிலான இருக்கைகளே உள்ளதால், குறைந்தபட்சம் பிளஸ் 2 படித்து வேலையில்லாதோர் முன்பதிவின் மூலம் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேலும் அவர்கள் பணியில் சேரவும், சுயதொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் பயிற்சி மையங்கள் மூலம் செய்வதுடன் பயிற்சிக்கு வந்து செல்வோருக்கான போக்குவரத்து செலவினையும் தமிழக அரசு  வழங்குகிறது.
தொடர்புக்கு: பயிற்சி ஒருங்கிணைப்பாளர், மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம், 19, கே.கே தெரு, எம்.கே.பி. நகர், அம்பத்தூர், செல்லிடப்பேசி எண்கள்: 9869041169, 7299955904.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com