ரயில் பயணிகளுக்கு தொந்தரவு: திருநங்கைகளுக்கு எதிராக 1,795 வழக்குகள் பதிவு

சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பது தொடர்பாக தினசரி சுமார் 5 திருநங்கைகளை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்கின்றனர்.
ரயில் பயணிகளுக்கு தொந்தரவு: திருநங்கைகளுக்கு எதிராக 1,795 வழக்குகள் பதிவு

சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பது தொடர்பாக தினசரி சுமார் 5 திருநங்கைகளை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்கின்றனர். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை திருநங்கைகளுக்கு எதிராக 1,795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

தினசரி 11 லட்சம் பேர் பயணம்: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்பட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கும் , சென்னை மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு  நகரங்களுக்கும் தினமும் 640 மின்சார ரயில் சேவை அளிக்கப்படுகிறது. புறநகர் ரயில்களில் தினசரி 11 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த ரயில்களில் பயணிகளிடம் பணம் கேட்பதும், கொடுக்கவில்லை எனில் அவர்களை தகாத வார்த்தைகளால்  திட்டுவதாகவும், தொந்தரவு செய்வதாகவும் பல்வேறு புகார்கள் வந்தன. இதன்பேரில், ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்.பி.எஃப். போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

1795 வழக்குகள் பதிவு: இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு தொந்தரவு  கொடுப்பது தொடர்பாக தினசரி சுமார்  5 திருநங்கைகளை ஆர்.பி.எஃப். போலீஸார் கைது செய்வதாக ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு  ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை திருநங்கைளுக்கு எதிராக 1,795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே சட்டம் 144, 145, 147 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு ரூ.6.83 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதிக வழக்குகள் பதிவு: இது குறித்து ஆர்.பி.எஃப். அதிகாரிகள் கூறியது: சென்னை-அரக்கோணம் பிரிவில் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெரும்பாலான வழக்குகள்  காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம், சென்னை சென்ட்ரல் ஆகிய நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. காட்பாடியில் 407 வழக்குகள், ஜோலார்பேட்டையில் 267 வழக்குகள், அரக்கோணத்தில் 222 வழக்குகள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனதில் மாற்றம் வேண்டும்: சென்னை கடற்கரை - தாம்பரம் பிரிவில்  பரங்கிமலையில் 45 வழக்குகள், செங்கல்பட்டில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள், பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களை  பணத்துக்காக துன்புறுத்துவதால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு அபராதம்  குறைவு என்பதால் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. அவர்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். 

பல வழக்குகளில் ஒரு குற்றவாளி மீண்டும் சிக்குகிறார். இதில், திருநங்கைகள் குழுவாக சம்பந்தப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தப் பிரச்னையை ரயில்வே நிர்வாகம் உணர்வுபூர்வமாக பார்க்கிறது. தமிழகத்தில் திருநங்கைகள் நலனுக்காக வெவ்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்கப்படுகிறது. இதற்காக திருநங்கைகள் நலன் சார்ந்த தன்னார்வ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது சட்டம் ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. ஆனால், இது மிகப்பெரிய சமூக பிரச்னை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com