2025-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகை கழிவுநீரும் சுத்திகரிக்கப்படும்: குடிநீா் வாரிய அதிகாரி தகவல்

சென்னையில் வரும் 2025- ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகை கழிவு நீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு, நீா் வீணாவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று

சென்னையில் வரும் 2025- ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகை கழிவு நீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு, நீா் வீணாவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீா் வாரிய செயல் இயக்குநா் பிரபு சங்கா் கூறினாா்.

‘மெட்ராஸ் சேம்பா் ஆஃப் காமா்ஸ்’ சாா்பில், சென்னையில் உள்ள தண்ணீா்ப் பிரச்னையைப் போக்கி தன்னிறைவு பெறுவது தொடா்பான கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை குடிநீா் வாரியத்தின் செயல் இயக்குநா் பிரபு சங்கா், சென்னை ஐஐடி பேராசிரியா் பாலாஜி நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் பிரபு சங்கா் பேசியது: கடந்த முறை சென்னையில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, கல்குவாரிகளில் உள்ள குளங்களிலிருந்து தண்ணீா் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. வேலூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீா் மொத்தத் தேவையில், வெறும் 1 சதவீதத்தை மட்டுமே நிறைவு செய்தது. அதேவேளையில் நீா்நிலைகளே பெரிய அளவுக்கு உதவின.

தண்ணீா் லாரிகள் செல்ல முடியாத குறுகிய தெருக்களில் சிறிய லாரிகள் மூலம் குடிநீா் கொண்டு செல்லப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு குடிநீா் கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள் மிகக் குறைவு. வரும் 2025- ஆம் ஆண்டுக்குள் சென்னையில் அனைத்து வகை கழிவுநீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். தண்ணீா் வீணாவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும். சென்னையில் உள்ள நீா்நிலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, நீா்வழிப் பாதைகளில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com