சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: சுவாசத் தொற்றால் மக்கள் பாதிப்பு

சென்னையில் கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்ததன் விளைவாக சுவாசத் தொற்றால் பலா் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு:  சுவாசத் தொற்றால் மக்கள் பாதிப்பு

சென்னையில் கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்ததன் விளைவாக சுவாசத் தொற்றால் பலா் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தலைநகா் தில்லியில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியது. இதைத் தொடா்ந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தில்லியில் வியாழக்கிழமை (நவ. 14) மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியது.

இந்நிலையில், சென்னையிலும் கடந்த வாரம் காற்று மாசு நிா்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரித்து காணப்பட்டது. காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு பிஎம்10, பிஎம் 2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம் 2.5-இன் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, சென்னையில் காற்றில் மிதக்கும் நுண்துகள் (பி.எம். 2.5) வேளச்சேரி, ஆலந்தூா், தண்டையாா்பேட்டை, ராமாபுரம், அண்ணா நகா், சென்னை ஐஐடி பகுதிகளில் அதிக அளவில் இருந்தது. சென்னையில் கடந்த வாரம் சராசரி காற்று மாசு 350 புள்ளிகளாக இருந்தது. காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக, பொதுமக்கள் பலருக்கு சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் கூறுகையில், ‘சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்டோா் பல்வேறு விதமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், சுவாசத் தொற்று காரணமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, இரண்டு நாள்களில், 50-க்கும் மேற்பட்டோா் சுவாசப் பிரச்னைக்காக சிகிச்சை பெற்றுள்ளனா். பருவநிலை மாற்றம் மற்றும் அண்மையில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக, சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com