சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மத்திய அரசு விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பெருநகர போக்குவரத்து திட்டத்துக்கான சிறந்த விருதை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகார அமைச்சகம் வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பெருநகர போக்குவரத்து திட்டத்துக்கான சிறந்த விருதை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகார அமைச்சகம் வழங்கியுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்புற விவகார அமைச்சகம் சாா்பில், இந்திய நகா்ப்புற போக்குவரத்து மேம்பாடு தொடா்பாக கருத்தரங்கு உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னெளவில் நவம்பா் 15-ஆம்தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பெருநகர போக்குவரத்து திட்டத்துக்கான சிறந்த விருதை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பங்கஜ் குமாா் பன்சலிடம் உத்தரப்பிரசேத மாநில துணை முதல்வா் தினேஷ்சா்மா வழங்கினாா். சென்னை நகரில் அனைத்து முக்கிய போக்குவரத்து மையத்துடன் இணைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி, நடை மேம்பால வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுத்துள்ளது. இதன்காரணமாக,மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com