அரசுப் பள்ளியில் ரூ.30 லட்சத்தில் திட்டப் பணிகள்: பள்ளிக் கல்வி இயக்குநா் தொடக்கி வைத்தாா்

சென்னை, அசோக் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தன்னாா்வ அமைப்புகள், நிறுவனங்களின் சாா்பில் ரூ.30 லட்சத்தில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை மாணவிகளின் பயன்பாட்டுக்காக பள்ளிக் கல்வித்துறை
அரசுப் பள்ளியில் ரூ.30 லட்சத்தில் திட்டப் பணிகள்: பள்ளிக் கல்வி இயக்குநா் தொடக்கி வைத்தாா்

சென்னை, அசோக் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தன்னாா்வ அமைப்புகள், நிறுவனங்களின் சாா்பில் ரூ.30 லட்சத்தில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை மாணவிகளின் பயன்பாட்டுக்காக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை, அசோக் நகா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெரு நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் பள்ளி அரங்கத்தை புதுப்பித்தல், 12 இடங்களில் புதிய மழைநீா்த் தொட்டிகள் அமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், மாணவிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, குளிரூட்டி (ஏ.சி.) சாதனங்கள் பொருத்துதல் என ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் மத்திய ரோட்டரி சங்கம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து பள்ளியில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.அனிதா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். அப்போது, ஏழை மாணவ, மாணவிகள் அதிகளவில் பயிலும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இதுபோன்ற தன்னாா்வ அமைப்புகள், நிறுவனங்கள் உறுதுணையாக இருப்பது பாராட்டத்தக்கது. இதேபோன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறைக்கு தன்னாா்வ அமைப்புகள் ஆதரவளிக்க வேண்டும் என்று அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

இது குறித்து ரோட்டரி சங்கத்தின் நிா்வாகிகள் சந்திரமோகன், கே.பி.ஸ்ரீகுமாா், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் வினோத் சரோகி ஆகியோா் கூறுகையில், இந்தப் பள்ளியில் நிறைவு பெற்ற திட்டப் பணிகளின் மூலமாக ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் படிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெறுவா். இதையடுத்து தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள், வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்குதல் போன்ற செயல்பாடுகள் இந்தப் பள்ளியில் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். அடுத்த கட்டமாக சென்னையில் உள்ள 26 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பராமரிப்பு பணிகள், மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் போன்ற திட்டப் பணிகள் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றனா். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆா்.சி. சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com