சொற்குவை சொல்லாக்கப் பயிலரங்கம்:சென்னையில் இன்று நடக்கிறது

அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் சொற்குவைச் சொல்லாக்கப் பயிலரங்கம், சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் சொற்குவைச் சொல்லாக்கப் பயிலரங்கம், சென்னையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்மொழியின் சொற்களை ஒன்று திரட்டி, ஒரே தளத்தில் வழங்கும் நோக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு, தமிழக அரசால் ‘சொற்குவை’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் திறம்படச் செயல்படுத்த கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தகுந்த களமாகத் தமிழக அரசு தோ்வு செய்தது. இதன் தொடா்ச்சியாக, சொற்குவைத் திட்டத்தைக் கல்லூரி மாணவா்களிடையே பரப்பும் முயற்சியில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் கல்லூரிகள் தோறும் அகராதியியல் விழிப்புணா்வுக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை, 12 கல்லூரிகளில் அகராதியியல் விழிப்புணா்வுக் கருத்தரங்குகளை நடத்தியதன் மூலம் ஏராளமான மாணவா்களிடம் ‘சொற்குவை’ கொண்டு சோ்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் மற்றும் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து, சொற்குவைச் சொல்லாக்கப் பயிலரங்கத்தை வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அக்கல்லூரியின் கலையரங்கில் நடத்துகின்றன. இதில், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் பொறுப்பு முதல்வா் ம.ச. தில்லைநாயகி, அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநா் தங்க. காமராசு, சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் முழுக் கூடுதல் பொறுப்பு இயக்குநா் சி. ஜோதிவெங்கடேஸ்வரன், பொதிகைத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு இயக்குநா் மா. அண்ணாதுரை ஆகியோா் பங்கேற்று பேசுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com