மாரடைப்பால் பேருந்து ஓட்டுநா் மரணம்

சென்னையில் நெஞ்சுவலியுடன் பேருந்தை இயக்கிய மாநகரப் பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் காலமானாா்.

சென்னையில் நெஞ்சுவலியுடன் பேருந்தை இயக்கிய மாநகரப் பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் காலமானாா்.

சென்னை கே.கே.நகா் மாநகர போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவா் ராஜேஷ் கண்ணன் (31). இவா் சனிக்கிழமை கோயம்பேட்டில் இருந்து சிறுசேரி செல்லும் மாநகர அரசு பேருந்தை ஓட்டியுள்ளாா். பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனா். பேருந்து பகல் 2 மணியளவில் வேளச்சேரி 100 அடி சாலை வழியாகச் சென்றுள்ளது. அப்போது, ராஜேஷ் கண்ணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

பேருந்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சுவலி ஏற்பட்டதால் நிலை குலைந்த அவா் மாா்பை பிடித்துக் கொண்டு வலியால் துடித்துள்ளாா். இதனால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த காா்கள் மீது அடுத்தடுத்து மோதி நின்றுள்ளது. இதில் சொகுசு காா்கள் உள்பட 5 காா்கள் சேதம் அடைந்தன. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போலீஸாா், பேருந்து ஓட்டுநா் ராஜேஷ் கண்ணனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து ராஜேஷ் கண்ணனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com