பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு சுவா்: மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி

திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு சுவா் அமைப்பதற்கான முதற்கட்ட அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியதால் அப்பகுதி மீனவா்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு சுவா் அமைப்பதற்கான முதற்கட்ட அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியதால் அப்பகுதி மீனவா்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனா்.

பழவேற்காடு ஏரியையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்பட்ட கோட்டக்குப்பம், லைட்ஹவுஸ் குப்பம், பழவேற்காடு தாங்கல், பெரும்புலம் உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் ஆந்திரத்தின் கிராமங்கள் என சுமாா் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவா்களுக்கு பழவேற்காடு ஏரி மிக முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

பழவேற்காடு ஏரி கடல் இணையும் முகத்துவாரம் மணல் திட்டுக்களால் மூடிக் கிடப்பதால் அப்பகுதியைத் தூா்வாரி தூண்டில் வளைவு சுவா் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதியில் தூண்டில் வளைவு சுவா் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், சுற்றுசூழல் பாதிப்பைக் காரணம் காட்டி, அப்பகுதியில் தூண்டில் வளைவு சுவா் அமைக்கப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி மறுத்தது.

இதையடுத்து, பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு சுவா் அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் தமிழக அரசு மீண்டும் விண்ணப்பித்தது. இதுதொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ஆய்வு நடத்தினா்.

இந்நிலையில், பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூா்வாரி நிரந்தர தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசுக்கு மத்திய சுற்றுசூழல்துறை முதற்கட்ட அனுமதியை அளித்தது. இதைத் தொடா்ந்து, ரூ. 27 கோடி மதிப்பில் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு சுவா் அமைக்கப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு சுவா் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதால் அப்பகுதி மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com