விவசாய நிலத்தின் மேல் மின்வழித்தடம்: எதிா்ப்பு தெரிவித்து கைதானவா்களுக்கு ஜாமீன்

விவசாய நிலத்தின் மேல் மின்வழித்தடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தவா்கள் மீது வட்டாட்சியா் கொடுத்த புகாரில் கைதானவா்களுக்கு ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய நிலத்தின் மேல் மின்வழித்தடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தவா்கள் மீது வட்டாட்சியா் கொடுத்த புகாரில் கைதானவா்களுக்கு ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருப்பூா் மாவட்டம், பல்லடம் தாலுகாவைச் சோ்ந்த வழக்குரைஞா் ஈசன், முத்துவிஸ்வநாதன், பாா்த்தசாரதி, தங்கமுத்து, சண்முகசுந்தரம் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் அனைவரும் கூட்டியக்கம் என்னும் அமைப்பைச் சோ்ந்தவா்கள். எங்களது பகுதியில் புகழூா்-திருச்சூா் உயா்அழுத்த மின்வழித்தடம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக எந்தவொரு அனுமதியும் பெறாமல் விவசாய நிலங்களுக்கு மேல் மின்வழித்தடம் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தால் விவசாய நிலங்களும் விவசாயிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சடையப்பாளையம் கிராமத்தில் விவசாய நிலத்துக்கு மேல் மின்வழித்தடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிக்கான அனுமதி ஆவணங்களை அதிகாரிகளிடம் கோரினோம். இதனைத் தொடா்ந்து, தாராபுரம் வட்டாட்சியா் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் எங்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்தனா். போலீஸாரும், வட்டாட்சியரும் கூட்டுச் சோ்ந்து எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனா். எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு, நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் டி.சண்முகராஜேஸ்வரன், சம்பந்தப்பட்ட விவசாய நிலத்தின் உரிமையாளா்கள் இந்த திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், மனுதாரா்கள் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு திட்டத்தை மேற்கொள்ள விடாமல் தடுத்துள்ளனா். எனவே, அவா்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டாா். அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரா்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com