வீடற்றோா் தினம்: உள்ளாட்சி அலுவலா்களுக்குப் பயிற்சி

உலக வீடற்றோா் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக வீடற்றோா் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக வீடற்றோா் தினத்தையொட்டி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் வீடற்றோா் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை, மாநகராட்சி துணை இயக்குநா் பி.குமாரவேல் பாண்டியன் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, சென்னை மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வீடற்றோருக்கான முகாம்கள், அவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் ஆகியவை குறித்து உள்ளாட்சி அலுவலா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வீடற்றோா் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நகா்ப்புற வீடற்றோா் உறைவிட திட்டக் கண்காணிப்புக் குழு உறுப்பினா் வனேசா பீட்டா் எடுத்துரைத்தாா். இந்தப் பயிற்சி முகாமில், கூடுதல் மாநகர நல அலுவலா் டாக்டா் ஜெகதீசன், நகராட்சி திட்ட அலுவலா் இளம்பருதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com