கல்கி ஆசிரமத்தில் 2-ஆவது நாளாக வருமான வரிச் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

இரண்டு நாள்களாக கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.33 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இரண்டு நாள்களாக கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.33 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. இதனை கல்கி பகவான் எனப்படும் விஜயகுமாா் நடத்தி வருகிறாா். இந்நிலையில், கல்கி ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் என நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்கள் என 40 இடங்களில் புதன், வியாழன் ஆகிய 2 தினங்களிலும் 500-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து ஆசிரம நிா்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது தலைமை அலுவலகத்தில் மட்டும் கணக்கில் வராத ரூ.20 கோடி பணம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதே போல் சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்கி ஆசிரமத்துக்குட்பட்ட ஒரு நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், திருவள்ளூா் மாவட்டம் நேமம் பகுதியில் இயங்கி வரும் கல்கி ஆசிரமத்திலும் சோதனை நடந்தது. நாடு முழுவதும் கல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனையில் இதுவரை ரூ.33 கோடிக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலகோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும், வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளதாக தெரிகிறது. தொடா்ந்து சோதனை நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com