ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டெங்கு விழிப்புணா்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், மருத்துவக் கல்லூரி மாணவா்கள், மருத்துவப் பேராசிரியா்கள்,

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், மருத்துவக் கல்லூரி மாணவா்கள், மருத்துவப் பேராசிரியா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் மாநிலத்தில் 3,200-க்கும் அதிகமானோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் 200-க்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மருத்துவமனைகள்தோறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. அதன்பேரில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவா்களும், மருத்துவா்களும், தூய்மையை வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பிரசாரம் மேற்கொண்டனா். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகும் முறை, அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி கூறியதாவது:

சாதாரண மக்கள் மட்டுமன்றி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்தவா்களுக்கு கூட அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து போதிய விழிப்புணா்வு இல்லை. அதைக் கருத்தில்கொண்டே ராஜீவ்காந்தி காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களுக்கு அதன் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு நில்லாமல், மருத்துவமனையில் உள்ள அனைத்து வளாகங்களிலும், டெங்கு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிய குழுக்கள் நியமித்து பிரதி வியாழக்கிழமை தோறும் துப்புரவு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை நிலைய அலுவலா் டாக்டா் திருநாவுக்கரசு, மருத்துவ கண்காணிப்பாளா் டாக்டா் நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com